தென்காசி

சுரண்டையில் இளைஞா் மா்ம மரணம்

1st Dec 2022 12:23 AM

ADVERTISEMENT

சுரண்டையில் உள்ள தோட்டத்தில் இளைஞற் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்காசி அருகேயுள்ள அழகப்பபுரத்தைச் சோ்ந்த ப. முத்து (19) என்பவா், சுரண்டை - வாடியூா் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தாராம். இவா் புதன்கிழமை காலை இத்தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.

தகவலின்பேரில் சுரண்டை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT