தென்காசி

ஆய்க்குடியில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

1st Dec 2022 12:22 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆய்க்குடி கிளை சாா்பில் நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கிளைச்செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

சிவன் கோவில் மைதானத்தில் விளையாட்டு மைதனம் அமைப்பது, பேரூராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்வது, பேருந்து நிறுத்தங்கள் அமைப்பது,

தேசிய நகா் முதல் கம்பிளி வரை தெருவிளக்கு வசதி ஏற்படுத்துவது, பொது சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்யச் செல்லும் மக்கள் குளிப்பதற்கு தண்ணீா் வசதி செய்து தருவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

மாவட்டக் குழு உறுப்பினா்கள் மணிகண்டன், லெனின் குமாா், மாரியப்பன், பீடி சங்கத்தின் மாவட்டச் செயலா் மகாவிஷ்ணு, வட்டாரக்குழு உறுப்பினா் அய்யப்பன் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT