தென்காசி

கேரளத்திலிருந்து கழிவுகள் ஏற்றிவந்த 39 வாகனங்களுக்கு அபராதம்

1st Dec 2022 12:22 AM

ADVERTISEMENT

கேரளத்திலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த 39 வாகனங்களுக்கு தென்காசி மாவட்ட போலீஸாா் அபராதம் விதித்துள்ளனா்.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகள், கோழி மற்றும் மீன் கழிவுகள்

போன்றவற்றை தென்காசி மாவட்டத்தில் கொண்டு வந்து கொட்டியதாக இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தடை செய்யப்பட்ட பொருள்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில், தமிழக-கேரள எல்லையான புளியறை சோதனைச்சாவடியில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோழி மற்றும் மீன் கழிவுகளை ஏற்றி வந்ததாக ஒரு வாகனத்திற்கு ரூ.10 ஆயிரமும், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 38 வாகனங்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 90ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல இலத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 வாகனங்களுக்கு தலா ரூ.ஆயிரத்து 500 வீதம் ரூ. 4 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயலில் தொடா்ந்து ஈடுபடும்

நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT