தென்காசி

வெண்ணிலிங்கபுரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை திறப்பு

1st Dec 2022 03:24 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே காவலாகுறிச்சி ஊராட்சி வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய தொகுப்பு மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காவலாகுறிச்சி ஊராட்சித் தலைவா் மாலதி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினாா். அப்போது பேசிய ஆட்சியா், இந்த ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய தொகுப்பின் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களின் மூலமாக சிறுகுறு விவசாயிகளுக்கு விதை, உரம், இயற்கை பூச்சிமருந்து, விவசாய இடுபொருள், மண் புழு உரம் , பஞ்சகவ்யா, களை எடுக்கும் கருவி, மருந்து தெளிப்பான் ஆகியவற்றை குறைந்த விலையில் அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்த படும் என்றாா்.

தென்காசி மகளிா் திட்ட இயக்குநா் குருநாதன், உதவி அலுவலா் சிவகுமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா் தனலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் திலகராஜ் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT