தென்காசி

சுரண்டையில் 20 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

31st Aug 2022 02:39 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சுரண்டையில் இந்து முன்னணி சாா்பில் 20 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

புதன்கிழமை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை (செப். 4) காலை 8 மணிக்கு அனைத்து விநாயகா் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடா்ந்து, 9 மணிக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிலை ஊா்வலம் நடைபெற்று, பிற்பகல் 3 மணிக்கு பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

ஏற்பாடுகளை சுரண்டை நகர இந்து முன்னணித் தலைவா் மாரியப்பன் தலைமையில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT