தென்காசி

ஆலங்குளம் அரசுப் பள்ளியில் 290 பேருக்கு விலையில்லா சைக்கிள்

31st Aug 2022 02:41 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து, 290 மாணவா்-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் ஒன்றியச் செயலா் செல்லதுரை, நகரச் செயலா் நெல்சன், தொழிலதிபா் மணிகண்டன், மோகன்லால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தலைமையாசிரியா் கிறிஸ்டல் மேரி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் செந்தாமரைச்செல்வி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மாணவி ஜென்ஸி தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT