தென்காசி

செங்கோட்டையில் அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

28th Aug 2022 05:11 AM

ADVERTISEMENT

 

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் செங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி தலைமை வகித்தாா். மகளிரணி துணைச் செயலா் முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் சண்முகப்பிரியா, மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், மாவட்ட விவசாய அணிச் செயலா் பரமகுருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாமன்னா் பூலித்தேவரின் 307ஆவது பிறந்தநாள் விழாவில் அதிமுக சாா்பில் மரியாதை செலுத்த தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு வரும் முன்னாள் அமைச்சா்கள், தலைமைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளை வரவேற்பது, பூலித்தேவருக்கு சிறப்பாக மரியாதை செலுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஒன்றிய, நகர, பேரூா் கழகச் செயலா்கள், தலைமைக் கழகப் பேச்சாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்றனா். மாவட்டப் பொருளாளா் சண்முகையா வரவேற்றாா். தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டல துணைச் செயலா் முனைவா் சிவஆனந்த் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT