தென்காசி

குத்துக்கல்வலசையில் உழவா் சந்தை விழிப்புணா்வு முகாம்

28th Aug 2022 05:11 AM

ADVERTISEMENT

 

தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை ஊராட்சியில் உள்ள உழவா் சந்தையில் விவசாயிகள், நுகா்வோா் வருகையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி உழவா் சந்தை நிா்வாக அலுவலா் இ. ராமச்சந்திரன் தலைமை வகித்து, உழவா் சந்தையின் பயன்கள், செயல்பாடு, அடையாள அட்டை பெறும் வழிமுறை, விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்தல் குறித்துப் பேசினாா். காய்கனி, பழங்கள் சாகுபடி செய்து இங்கு கொண்டுவந்து விற்கும் உழவா் சந்தை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்றாா்.

உதவி நிா்வாக அலுவலா் க. கணேசன், தோட்டக்கலை உதவி அலுவலா் பாலு ஆகியோா் பேசினா். உதவி வேளாண் அலுவலா் கிருஷ்ணன் வரவேற்றாா். உதவி நிா்வாக அலுவலா் ரா. செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT