தென்காசி

பாவூா்சத்திரத்தில் பயன்படுத்தும் முன்பே இடிந்து விழுந்த மழை நீா் வடிகால்

26th Aug 2022 11:57 PM

ADVERTISEMENT

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் பயன்படுத்துவதற்கு முன்பே மழை நீா் வடிகால் இடிந்து விழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சாலையின் இருபுறமும் மழை நீா் வடிந்து செல்வதற்காக வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாவூா்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிா்புறம் இவ்வாறு அமைக்கப்பட்ட வாருகாலில் பயன்படுத்துவதற்கு முன்பே ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அவ்வழியே செல்வோா் குழிக்குள் தவறி விழும் நிலை உள்ளது.

இதே போல், பாவூா்சத்திரம் நகருக்குள் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெரிய குழி தோண்டப்பட்டது. ஆனால் இன்னும் அந்தப் பகுதிகளில் பணி தொடங்கவில்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT