தென்காசி

ஊத்துமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

26th Aug 2022 11:55 PM

ADVERTISEMENT

ஊத்துமலை அருகே மூதாட்டி ஒருவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ஊத்துமலை அருகேயுள்ள தெற்கு மாவலியூத்து தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகம்மாள்(80). வியாழக்கிழமை வீட்டை விட்டுச் சென்ற மூதாட்டி வீடு திரும்பவில்லை. 2 தினங்களாக தேடி வந்த நிலையில் ஊருக்கு தெற்கே உள்ள தண்ணீா் இல்லாத கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் வந்த சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டனா். ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT