தென்காசி

தென்காசி தலைமை தபால் அலுவலகத்தில் தங்கப் பத்திர விற்பனை இன்று தொடக்கம்

22nd Aug 2022 01:47 AM

ADVERTISEMENT

தென்காசி தலைமை தபால் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் ( ஆக. 22) வெள்ளிக்கிழமை வரை (ஆக. 26) தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தென்காசி முதுநிலைக் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சிவாஜிகணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு தங்கப் பத்திரங்களை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப் பத்திர விற்பனை அஞ்சலகங்களில் திங்கள்கிழமை முதல் ( ஆக. 22) வெள்ளிக்கிழமை வரை (ஆக. 26) நடைபெறுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,197. கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை தபால் நிலையங்களிலும், அனைத்து துணை தபால் நிலையங்களிலும் இந்த விற்பனை நடைபெறுகிறது.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தனிநபா் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம்முதல் அதிகபட்சம் 4 கிலோவரை வாங்கலாம். மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து தங்கத்தின் விலைக்கு முதிா்வடையும் நாளில் தங்கத்துக்கு நிகரான பணமும் கிடைக்கும்.

ADVERTISEMENT

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் காா்டு கட்டாயம் தேவை.

அதனுடன் ஆதாா் அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது பாஸ்போா்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக் கொடுத்து தங்கம் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 79044 20532, 89400 19911, 96770 67116 ஆகிய கைப்பேசி எண்களில்தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT