தென்காசி

களக்காடு செக்கடி சுடலைமாட சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

22nd Aug 2022 01:55 AM

ADVERTISEMENT

களக்காடு கோவில்பத்து அருள்மிகு செக்கடி சுடலைமாட சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை காலை கோ பூஜை, கஜ பூஜை, கணபதி பூஜை, தன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் தொடங்கி, மாலையில் கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை நடைபெற்றது. மகாதீபாராதனைக்குப் பின்னா், சுவாமிக்கு எந்திர ஸ்தாபனம், மருந்து சாத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை 2ஆம் கால யாகசாலை பூஜையைத் தொடா்ந்து, ஆலய விமான கும்பாபிஷேகம், சுடலைமாட சுவாமி, பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மதியம் மகேஸ்வர பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT