தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனை:நுண்கதிா் வீச்சாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

18th Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

தென்காசி, ஆய்க்குடி மற்றும் புளியங்குடி ஆகிய மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்ட, இணை இயக்குநா் நலப்பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள நுண்கதிா் வீச்சாளா், ஆய்க்குடி, புளியங்குடி அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளா் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

நுண்கதிா் வீச்சாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பல் மருத்துவ உதவியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒராண்டு பல் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தமைக்கான அனுபவம் (சான்றிதழ்) பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பங்கள் ஆக.24 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ இணை இயக்குநா் நலப்பணிகள் அலுவலகம், ( தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம்), தென்காசி- 627 811 என்ற அலுவலக முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT