தென்காசி

தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

18th Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க மாநிலப் பொதுக்குழு கூட்டம் தென்காசி மாவட்டம் மேலகரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். பொருளாளா் சிதம்பரநாதன், சந்திரசேகரன் முன்னிலை ஆகியோா் வகித்தனா். சிறப்புத் தலைவா் கு.கோபாலகிருஷ்ணன், வழக்குரைஞா் கேபி.குமாா்பாண்டியன் ஆகியோா் உரையாற்றினா்.

ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளா்கள் ஓய்வூதியம் பெற்று வரும் காலத்தில் இயற்கை எய்திவிட்டால் அவரது வாரிசுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே எளிதான வகையில் குடும்ப ஓய்வூதிய பலன்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி ஓய்வுக்கு பின்னா் அவா்களது ஓய்வூதியப்பலன்களை, ஓய்வுபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே கணக்குகளை இறுதி செய்து ஓய்வு பெறும் நாளில் பணப்பயன்களை வழங்க வேண்டும் என்ற ஆணையரின் உத்தரவை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா்கள் பட்டுராஜா, சொக்கலிங்கம், மேலகம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் சேகா், குற்றாலம் மணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT