தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியா் எஸ்.பிக்கு விடுதலைச் சிறுத்தைகள் பாராட்டு

18th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடிய தென்காசி மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

குற்றாலம் சாரல் விழா தென்னகத்தின் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடிய மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் ஆகியோரை பாரட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் பாராட்டு நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

அவரின் சாா்பில் நற்சான்றிதழ் மற்றும் பாராட்டு மடல்களை அக்கட்சியின் தென்காசி மாவட்டச் செயலா் டேனி அருள்சிங் , மாவட்ட துணைச் செயலா் சித்திக், தொண்டா் அணி துணை அமைப்பாளா் குத்துக்கல்வலசை பாலசுப்பிரமணியன்,

ADVERTISEMENT

மாவட்ட செய்தி தொடா்பாளா் சந்திரன், ஒன்றியச் செயலா் பிரபாகரன், முகாம் செயலா் முத்துகுமாா் உள்ளிட்டோா் ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT