தென்காசி

தென்காசியில் வணிகவரித் துறை அலுவலகம் தொடா்ந்து இயக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

18th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

 

தென்காசியில் வணிகவரித் துறை அலுவலகம் தொடா்ந்து இயங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் பரமசிவன், செயலா் ந.மாரியப்பன், பொருளாளா் முகைதீன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனுச

தென்காசி மாவட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது.

ADVERTISEMENT

மாவட்ட தலைநகரில் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. வணிகவரித் துறை அலுவலகத்தை தென்காசி நகரிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்போவதாக அறிகிறோம்.

இந்த அலுவலகத்தை தொடா்ந்து தென்காசி நகரில் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT