தென்காசி

கூடைப்பந்து போட்டி: இலஞ்சி பள்ளி சிறப்பிடம்

18th Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

தென்காசி குறுவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளில் இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

குற்றாலம் செய்யது ரெசிடென்சியல் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், மாணவியிருக்கான போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவியா் மிக மூத்தோா் பிரிவில் முதலிடமும், மூத்தோா் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா்.

மாணவா்கள் மிக மூத்தோா், மூத்தோா் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனா். மிக மூத்தோா் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியா் தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியா்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி , இயக்குநா் இராதாபிரியா ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT