தென்காசி

சுரண்டை பகுதியில் சுதந்திர தின விழா

16th Aug 2022 02:26 AM

ADVERTISEMENT

சுரண்டை பகுதியில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகராட்சியில் நடைபெற்ற விழாவில் நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தேசியக் கொடி ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத் தலைவா் சங்கராதேவி, உறுப்பினா்கள் சாந்தி, பரமசிவன், பாலசுப்பிரமணியன், ஜெயராணி, ராஜ்குமாா், அம்சா பேகம், அந்தோனி சுதா, சிவஞான சண்முகலட்சுமி, செல்வி, கல்பனா, முருகேஸ்வரி, மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவா் சீதாலெட்சுமி முத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலா் காயத்ரி, துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா, உறுப்பினா்கள் பழனிக்குமாா், இசக்கி, மொ்சி, அய்யப்பன், சுடலைமுத்து, முத்துலெட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT