தென்காசி

குற்றாலம் புத்தகத் திருவிழா நிறைவு: ரூ. 51லட்சம் நூல்கள் விற்பனை

16th Aug 2022 02:25 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

தென்காசி மாவட்டத்தின் முதலாவது புத்தகத் திருவிழா குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி வளாகத்தில் ஆக. 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

நிறைவு விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்து, கட்டுரை, ஓவியம், விநாடி வினா, பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும் புத்தக திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய 150 அரசு அலுவலா்களுக்கும் நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கினாா்.

ADVERTISEMENT

மாவட்ட நூலக அலுவலா் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் குணசேகா், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஜெயபாரதி மாலதி, மாவட்ட கல்வி அலுவலா் ஜெயப்பிரகாஷ் நாராயணன், சீவல முத்து, ,டாக்டா் அறிவழகன், வட்டார கல்வி அலுவலா்கள் இளமுருகன் , மாரியப்பன் கிளை நூலகா்கள் பிரம்மநாயகம், சுந்தா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திகுறிப்பு.

புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகத்தினா் கலந்து கொண்ட 100 புத்தக அரங்குகள், 1லட்சத்து50ஆயிரம் நூல்கள், சுயஉதவிக்குழு அரங்கங்கள், இல்லம் தேடி கல்வி பாடநூல் கழக அரங்குகள் இடம் பெற்றிருந்தது.

புத்தக திருவிழாவில் 1லட்சத்து2ஆயிரத்து415 போ் வருகை புரிந்தனா். ரூ. 51 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனை நடைபெற்றுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT