தென்காசி

கீழப்பாவூா் பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்

16th Aug 2022 02:23 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் ஒன்றியப் பகுதிகளில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தேசியக் கொடியேற்றினாா். துணைத் தலைவா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், முருகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, பெத்தநாடாா்பட்டி, மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, கல்லூரணி, ஆவுடையானூா், அரியப்பபுரம் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் ஜெயராணி கலைச்செல்வன், முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், ராஜ்குமாா், குத்தாலிங்கராஜன், தினேஷ்குமாா் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT