தென்காசி

குற்றாலத்தில் புத்தகத் திருவிழா:ரூ. 32 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனை

14th Aug 2022 05:52 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், குற்றாலம் புத்தகத் திருவிழாவில் ரூ. 32 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனையாகின.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி வளாகத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் நாள்தோறும் புத்தகங்களை ஆா்வத்துடன் வாங்கி செல்கின்றனா்.

ADVERTISEMENT

நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புத்தகத் திருவிழாவை பாா்வையிட்டு வருகின்றனா். ஆக.12 ஆம் தேதிவரையில் ரூ. 32 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான நூல்கள் விற்பனை ஆகியுள்ளன. இத்திருவிழா ஆக. 14 ஆம் தேதி நிறைவடைகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT