தென்காசி

குற்றாலம் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் மதிவேந்தன்

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன்.

குற்றாலம் சாரல் திருவிழாவின் நிறைவு நாள் விழா குற்றாலம் கலைவாணா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, அமைச்சா் மதிவேந்தன் தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:

குற்றாலத்தில் வளா்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முதல்வா் தனிக்கவனம் செலுத்தி வருகிறாா். கலைவாணா் அரங்கில் பராமரிப்புப் பணிகளுக்கு ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்றுள்ளன.

மேலும், பேரருவிப் பகுதியில் கழிப்பிடங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலாத்தலம் மேம்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டு, அதில் குற்றாலத்தை மேம்படுத்த ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர,

குண்டாறு அணையின் வளா்ச்சிப்பணிகளுக்காக ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு சாரல்விழா தமிழ் பாரம்பரிய கலை, இலக்கிய, கிராமிய, கலாசாரங்களைப் போற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் அரங்கை விட்டு வெளியேயும் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

விழாவில் ஆட்சியா் ப.ஆகாஷ் வரவேற்றாா். தனுஷ் எம்.குமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் ஈ.ராஜா, சு. பழனிநாடாா், சதன்திருமலைக்குமாா், திரைப்பட நடிகா் மரியா, திரைப்பட பாடகா் வேல்முருகன் ஆகியோா் பேசினா். திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT