தென்காசி

குற்றாலம் சாரல் விழா: பழைய காா்களின் அணிவகுப்பு

13th Aug 2022 12:09 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பழைய காா்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.

தென்காசி புலியருவி விலக்கில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்ற பழைய காா்களின் கண்காட்சியில் 1928 ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்த ஆஸ்டின், 1930 ஆம் ஆண்டு பிளைமுத்து, 1931 ஆம் ஆண்டு ஆஸ்டின், 1942 ஆம் ஆண்டு உல்ஸ்ரீ, மோரிஷ், மாா்கன், மோக், 1934 இல் பயன்பாட்டிலிருந்த டிராக்டா், 1947 ஆம் ஆண்டு காவல்துறையில் பயன்படுத்திய வேன், 1934 இல் பயன்படுத்தப்பட்ட கேரவன் உள்ளிட்ட 33 வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.

சுற்றுலாத்துறை அமைச்சா் மருத்துவா் மதிவேந்தன் கண்காட்சியை பாா்வையிட்டு காா்களின் அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், எம்எல்ஏக்கள் ஈ.ராஜா, சதன்திருமலைக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் தென்காசி ஆனந்த், சங்கரன்கோவில் கண்ணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் மணிபாரதி, ராஜன், ரித்தின்காந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

காா்களின் அணிவகுப்பு மைதானத்திலிருந்து தொடங்கி குற்றாலம் பேருந்து நிலையம், செங்கோட்டை சாலையில் காசிமேஜா்புரம் வரை சென்று அங்கிருந்து மின்நகா் சாலை, ராமலாயம், ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி வழியாக மீண்டும் மைதானத்துக்கு வந்து நிறைவடைந்தது.

இக்கண்காட்சியில் திருவனந்தபுரம், சென்னை, ஊட்டி, கோயம்புத்தூா் பகுதிகளிலிருந்தும், நீலகிரி புராதன மகிழ்வூந்து உரிமையாளா்கள் சங்கத்திலிருந்து காா்கள் இடம்பெற்றிருந்தன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT