தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை

13th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

நாட்டில் போதுமானமழை பொழிந்து, விவசாயம் தழைக்க வேண்டி, தோரணமலை முருகன்கோயிலில் வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை ஆகியவை நடைபெற்றன.

மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மனுக்கும், முருகனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, பௌா்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT