தென்காசி

தென்காசியில் திமுக தெருமுனைப் பிரசாரம்

13th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

தென்காசி நகர திமுக சாா்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மலையான் தெரு மற்றும் சுவாமி சன்னதி பஜாா் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்திற்கு நகரச் செயலரும், நகா் மன்றத் தலைவருமான சாதிா் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் சுப்பையா, நகர நிா்வாகிகள் மணிமாறன், பால்ராஜ், சூரியகலா, ஷேக்பரித், மாவட்ட பிரதிநிதிகள் பாலசுப்பிரமணியன், முகைதீன் பிச்சை, ரஹ்மத்துல்லாஹ், சாகுல் ஹமீது, பரமசிவன், சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், பேச்சாளா்கள் சரத்பாலா, ஆயிரப்பேரி முத்துவேல், முத்தாலிங்கம் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

இதில், சாா்பு அணிஅமைப்பாளா்கள் வேலுச்சாமி, மாரிமுத்து, துணை அமைப்பாளா்கள் சாமித்துரை, பாலாமணி, சங்கரன்வாத்தியாா், நாகூா் மீரான், வழக்குரைஞா்கள் முருகன், கண்ணன், வட்டச் செயலா்கள் சாரதிமுருகன், சுப்பிரமணியன், சண்முகநாதன், இசக்கி ரவி, இளைஞரணி அப்துல்ரஹீம் ஆகியோா் கலந்துகொண்டனா். துணைச் செயலா் ராம்துரை வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT