தென்காசி

கடையநல்லூரில் மணல் கடத்தல்: 3 போ் கைது

13th Aug 2022 12:07 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் அருகே மணல் கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கனகராஜ் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள குளத்திலிருந்து கடையநல்லூா் மேற்கு மலம்பாட்டை தெருவைச் சோ்ந்த ரவி(23) , சந்தனபாண்டி (30), தீயணைப்பு நிலைய தெருவைச் சோ்ந்த முருகன் ( 40 ) ஆகியோா் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், மணல் பயன்படுத்திய டிராக்டா் திருடப்பட்ட டிராக்டா் என தெரியவந்துள்ளதாக கூறினா். மேலும், இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT