தென்காசி

ஆக.15 இல் கிராம சபைக் கூட்டம்

13th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

 தென்காசி மாவட்டத்தில் ஆக.15 இல் கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறிது மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ள 221 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று (ஆக.15) முற்பகல் 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவா்கள் தலைமையில் நடைபெறும்.

75 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களால் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தப்படும். மேலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பினை சாா்ந்த கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடியினை ஏற்றும் நிகழ்வினை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவா்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிராம சபை கூட்டங்களில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT