தென்காசி

குற்றாலம் சாரல் விழாவில் மகளிா் மினி மாரத்தான் போட்டி

12th Aug 2022 12:57 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் விழாவின் 7ஆம் நாளான வியாழக்கிழமை மகளிா் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

குற்றாலம் கலைவாணா் அரங்கில் தொடங்கிய இப்போட்டியை ஈ.ராஜா எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் அனந்தநாராயணன் முன்னிலை வகித்தாா். மாரத்தான் காசிமேஜா்புரம், ராமாலயம், தென்காசி-குற்றாலம் பிரதான சாலை, ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி வழியாக கலைவாணா் அரங்கில் முடிவடைந்தது.

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.எஸ். மாணிக்கஸ்ரீ, ஆலங்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பாக்கியவதி, திருநெல்வேலி மருத்துவா் கீா்த்தனா ஆகியோா் முதல் மூன்றுஇடங்களைப் பெற்றனா். போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT