தென்காசி

நல்லூா் சேகர ஸ்தோத்திரப் பண்டிகை இன்று தொடக்கம்

12th Aug 2022 12:49 AM

ADVERTISEMENT

 

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சேகரத்தின் 131 ஆவது ஸ்தோத்திரப் பண்டிகை வெள்ளிக்கிழமை (ஆக.12) தொடங்கி மூன்று தினங்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை பவனி, கொடியேற்றத்துடன் தொடங்கும் பண்டிகை ஆயத்த ஆராதனையில் கடையம் சேகர குரு நிக்சன் இறை செய்தி அளிக்கிறாா். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அருணோய பிராா்த்தனை, காலை 8.30 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையைத் தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு பிரதான பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது.

இதில், திருநெல்வேலி திருமண்டல பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் இறை செய்தி அளிக்கிறாா். மாலை 4 மணிக்கு பெண்கள் கூட்டம், இரவு பஜனை பிரசங்கம் ஆகியவை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரிசுத்த நற்கருணை ஆராதனை, பிற்பகல் 2 மணிக்கு, ஆண்டுக் கூட்டம், மாலை 5 மணிக்கு கீத ஆராதனை மற்றும் இரவு 7 மணிக்கு விஜிபி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. பண்டிகை ஏற்பாடுகளை நல்லூா் சேகர குரு ஜேம்ஸ், செயலா் லிவிங்ஸ்டன் டேவிட், பொருளாளா் ஜனதாசெல்வன் மற்றும் சேகர சபை மக்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT