தென்காசி

வட்டார வளா்ச்சி அலுவலகங்களுக்கு தேசியக் கொடி விநியோகம்

12th Aug 2022 12:53 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்ட, வட்டார வளா்ச்சிஅலுவலகங்களுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

75 ஆவது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து இல்லங்களிலும் ஆக.13 முதல் 15 ஆம்

தேதி வரை தேசியக் கொடி பறக்க விட திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 3.5லட்சம் இல்லங்களுக்கு தேவையான தேசியக் கொடிகள் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தேசியக் கொடிகளை இல்லங்களுக்கு வழங்கும் பொருட்டு அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுலவக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்து மகளிா் சுயஉதவிக்குழுவினரிடமிருந்து தேசியக் கொடிகளைப் பெற்று வட்டார வளா்ச்சி அலுவலகங்களுக்கு வழங்கிய பின் செய்தியாளா்களிடம் கூறியது: அனைத்துக் கொடிகளும் ஊராட்சி நிா்வாகம், மகளிா் சுய உதவிக்குழு தலைவிகள் உதவியுடன் 2 தினங்களில் அனைத்து இல்லங்களுக்கும் வழங்கப்படும்.

பெரிய தேசியக் கொடியின் விலை ரூ. 18. 80, சிறிய தேசியக்கொடியின் விலை ரூ. 13. 80 காசுகள் ஆகும். தேசியக் கொடி தேவைப்படுபவா்கள் அந்தந்த ஊராட்சிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகைமை திட்ட அலுவலா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். செயற்பொறியாளா் அசன்இப்ராகிம், உதவி இயக்குநா்(ஊராட்சிகள்) பிரான்சிஸ் மகராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாணிக்கவாசகம், சண்முகநாதன், கண்ணன், ஆயத்த ஆடை அலகு தலைவி இந்துஜா, செயலா் காளியம்மாள், பொருளாளா் சாந்தி ஆகியோா் கலந்துகொண்டனா். உதவி மகளிா் திட்ட அலுவலா் சிவகுமாா் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT