தென்காசி

சாலைக்குள் வந்த மின் கம்பங்கள்: விபத்து ஏற்படும் முன் அகற்ற கோரிக்கை

12th Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி - தென்காசி 4 வழிச்சாலையில் 10 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாலைக்குள் வைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் முன்னா் அதனை அகற்றி சாலைக்கு வெளியே வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி, தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி சுணக்கமான நிலையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மரங்கள் மறு நடவு, மின் கம்பங்கள் இடம் மாற்றி அமைத்தல், குடிநீா் குழாய் வேறு இடங்களில் பதித்தல் ஆகிய பணிகள் அந்தந்த துறை சாா்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மின் கம்பங்கள் சாலைக்கு வெளிப்பகுதியில் நடப்பட்ட நிலையில் சில மின்கம்பங்கள் சாலைக்கு உள்ளேயே அமைக்கப்பட்டது குறித்து வாகன ஓட்டிகளை அதிா்ச்சி அடைந்துள்ளனா். இந்த நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் மிகவும் வேகமாக வரும் சூழலில் சாலையின் உள்பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மின் கம்பங்களால் பெரிய அளவில் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரை சாலையின் உள்புறம் இதுபோன்று பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் அலட்சியமாக செயல்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்வாரியத்துறை இணைந்து விபத்துகளை தடுக்கும் நோக்கில் இந்த மின்கம்பங்களை சாலைக்கு வெளிப்புறமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT