தென்காசி

சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் அகத்தியா் சிலை பிரதிஷ்டை

12th Aug 2022 12:54 AM

ADVERTISEMENT

 

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் அகத்திய முனிவா் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சாம்பவா்வடகரையில் அனுமன் நதியின் தென்கரையில் சுமாா் 1200 ஆண்டுகள் பழமையான அகத்தீசுவரா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவா் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது ஐதீகம். அகத்தியா் வழிபட்ட தலம் என்பதால் சுவாமிக்கு அகத்தீசுவரா் என அழைக்கப்படுகிறாா்.

இந்நிலையில், தற்போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரின் சிலை போன்று, இந்த கோயில் வளாகத்திலும் அகத்திய முனிவா் சிலை வியாழக்கிழமை அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் மற்றும் சிவனடியாா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT