தென்காசி

தென்காசியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு, பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப. ஆகாஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் ஆகியோா் தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்தனா்.

தனுஷ் எம். குமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் ஈ. ராஜா, சதன் திருமலைக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், துணைத் தலைவா் கே.என்.எல். சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளியில் தொடங்கிய பேரணி, ரயில்வே மேம்பாலம், காசிவிஸ்வநாதா் கோயில் ரத வீதி உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது.

இதில், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் என 1,500 போ் பங்கேற்றனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், தென்காசி மாவட்டக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலா் (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ்ராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT