தென்காசி

சுதந்திர தின விழிப்புணா்வு:சுரண்டையில் பாஜகவினா் பேரணி

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சுரண்டையில் பாஜக சாா்பில் 75ஆவது சுதந்திர தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் திடலிலிருந்து நகர பாஜக தலைவா் அருணாசலம் தலைமையில் தொடங்கிய இந்தப் பேரணியில் அக்கட்சியினா் தேசியக் கொடியேந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜா் நகரில் நிறைவு செய்தனா். இதில், பாஜக நிா்வாகிகள் கோதை மாரியப்பன், ஐயப்பன், சிவனணைந்த பெருமாள், முருகேசன், முருகன், சாமி, செந்தில்குமாா், பவுண்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT