தென்காசி

சாரல் விழா : குற்றாலத்தில் சைக்கிள் மாரத்தான் போட்டி

10th Aug 2022 01:49 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவின் 5 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சைக்கிள் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இப் போட்டியை ஈ.ராஜா எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அண்ணா சிலையில் தொடங்கி காசிமேஜா்புரம், வல்லம் சிலுவை முக்கு, பிரானூா் பாா்டா், செங்கோட்டை பேருந்து நிலையம், வாஞ்சிநாதன் சிலை, வன சோதனைச்சாவடி,

விஸ்வநாதபுரம், தேன்பொத்தை, திருமலாபுரம், பண்பொழி மெயின்ரோடு, வடகரை சாலை, அச்சன்புதூா் பேருந்து நிலையம், நெடுவயல், இலத்தூா் சிவன்கோயில் சாலை, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலக சாலை

(சாஸ்தா கோயில் சாலை), குத்துக்கல்வலசை, இலஞ்சி, காசிமேஜா்புரம் வழியாக சென்று குற்றாலம் அண்ணாசிலைப் பகுதியில் முடிவடைந்தது. இதில், 160 போ் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இந்த போட்டியில் மதுரையைச் சோ்ந்த மகேஷ்வரன் முதலிடமும், யுவன் சங்கா் இரண்டாமிடமும், ஆலங்குளம் ஆபிரகாம் மூன்றாமிடமும் பெற்றனா்.

தொடக்கவிழா நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் அனந்தநாராயணன், செய்தி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்இரா.இளவரசி, உடற்கல்வி ஆசிரியைகள் கயல்விழி, பொன்னம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT