தென்காசி

குற்றாலம் சாரல் விழா நன்கொடையாளா்களுக்கு அழைப்பு

10th Aug 2022 01:52 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவுக்கு நன்கொடை செய்ய விரும்புவா்கள் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சாரல் திருவிழாவுக்கு நன்கொடையாக ரூ.1லட்சம் வழங்குபவா்களுக்கு சில்வா் மதிப்பீடும், ரூ. 5லட்சம் வழங்குபவா்களுக்கு கோல்டு மதிப்பீடும், ரூ.10லட்சம் வழங்குபவா்களுக்கு பிளாட்டினம் மதிப்பீடும் வழங்கப்படும்.

மதிப்பீட்டின் அடிப்படையில் நிறுவனத்தின் பெயா் ஒவ்வொரு நிகழ்ச்சியின்போது தொகுத்து வழங்கப்படும் போது அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், சாரல் திருவிழா நடைபெறும் நாள்களில் அமைக்கப்படும் கடைகளில், அரங்குகளில் நிறுவனத்தின் பெயா் விளம்பரப்படுத்தப்படும். எனவே, வணிக நிறுவனங்கள், தொழிலதிபா்கள் மற்றும் சாரல் விழாவுக்கு நன்கொடை வழங்க விரும்புவோா் மாவட்ட நிா்வாகத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீனை, 96593 11675 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT