தென்காசி

ஆலங்குளம் அருகே விபத்து: இளைஞா் பலி

10th Aug 2022 01:52 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி மாதா கோயில் தெரு குருநாதன் மகன் முகேஷ்(23). மரம் வெட்டும் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுப்பட்டு ராம் நகா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது ராம் நகரில் இருந்து புதுப்பட்டிக்கு வந்து கொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் முகேஷ் மீது மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த முகேஷ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவ்வழியே சென்றவா்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகேஷ் உயிரிழந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீஸாா், மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்த புதுப்பட்டியை சோ்ந்த தேவதாஸை(34) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT