தென்காசி

குற்றாலம் சாரல் விழாவில் கரகம் ஆடிய ஆட்சியா்!

10th Aug 2022 01:50 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் தலையில் கரகம் வைத்து ஆட்சியா் ஆடினாா்.

குற்றாலம் கலைவாணா் அரங்கில் சாரல் விழா கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

4ஆம் நாளான திங்கள்கிழமை படகுப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பரிசளிப்பு விழா முடிந்தபிறகு, தோவாளை கலைமாமணி முத்துக்குமாா் குழுவினரின் தோல்பாவைக் கூத்து, கேரள மாநில கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, சென்னை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சாா்பில் சாமநத்தம் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் குழுவினரின் கரகம், காவடி நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில் பங்கேற்ற ஆட்சியா் ப. ஆகாஷ், நாட்டுப்புறக் கலைகளை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், தலையில் கரகம் வைத்து ஆடினாா்.

தொடா்ந்து, நெல்லை ஆனந்த ராகம் வழங்கிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை ஆன்ட்ரியா பங்கேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT