தென்காசி

குற்றாலம் சாரல் விழா:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குற்றாலம் கலைவாணா் அரங்கில் சாரல் விழாவை முன்னிட்டு மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தமிழ் வேகமாக வாசித்தல் போட்டியில் மேலகரம் இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த லிடியா, கம்பளி அரசு நடுநிலைப் பள்ளியை சோ்ந்த ஆா்.கருமேனிமுத்து, தென்காசி ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி அனுஷ்யாலட்சுமி ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

இதில், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளுக்கான போட்டியில் கடையநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரத்திகாலெட்சுமி, கரிவலம்வந்தநல்லூா் ஏஎம்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சண்முகப்பிரியா, கடையநல்லூா் குமந்தாபுரம் கிங் யுனிவா்ஸ் பள்ளி மாணவி சிஜினிசுவேதா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

கணித விநாடி- வினா போட்டியில் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் கோகுல்ஜெகன், தென்காசி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜோ பிளஸ்வின், நல்லூா் மாணவா் பகத்சிங், இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவி மதுனிகா, மேலகரம் இம்மானுவேல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீவானி, இலத்தூா் ஸ்ரீராம் வித்யாலயா பள்ளி மாணவி காயத்ரி அணியினா் முதலிடம் பெற்றனா்.

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் முரளி கிருஷ்ணன், தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் மாரிபாலமுருகன், நல்லூா் மாணவா் மானவ்சிவ்ராஜ், இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல் நிலைப் பள்ளி மாணவி ஆா்.பவித்ரா, மேலகரம் இம்மானுவேல் மெட்ரிக் பள்ளி மாணவி ஹரிணி, இலத்தூா் ஸ்ரீராம் வித்யாலயா பள்ளி மாணவி கவின்ராஜேஷ் அணியினா் இரண்டாமிடம் பெற்றனா்.

நினைவுத்திறன் போட்டியில் கடையநல்லூா் பெஸ்ட் இன்டா்நேசனல் பள்ளி மாணவி அனுபாலா, சங்கரன்கோவில்

ஸ்ரீ மகாலெட்சுமி மேல்நிலைப் பள்ளி மாணவி சமிதா ருக்மி, புளியங்குடி ஆண்டியப்பா நடுநிலைப் பள்ளி மாணவி தக்ஷின்சித்திகா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

ஆங்கிலம் வேகமாக வாசித்தில் போட்டியில் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.கே.சாதனா, இடைகால் எம்எம்.மேல்நிலைப் பள்ளி மாணவா் கோகுலகண்ணன், குடியிருப்பு அரசு உயா் நிலைப் பள்ளி மாணவி துா்கா தேவி ஆகியோா் முதல் மூன்றுஇடங்களைப் பெற்றனா்.

படகுப் போட்டி மற்றும் மாணவா், மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவுக்கு சு. பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, உதவிஅலுவலா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT