தென்காசி

ரூ. 5 ஆக குறைந்த தக்காளி விலை: விவசாயிகள் கவலை

9th Aug 2022 02:24 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் பகுதியில் தக்காளி விலை ரூ. 5 க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கும் மேலாக விற்பனையானது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டிருந்தனா். தற்போது விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் வரை ஆலங்குளம் சந்தையில் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ. 5 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் ரூ. 5 க்கும் குறைவாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டால் கட்டுபடியாகாது என எண்ணிய விவசாயிகள் சிலா் அதனை ஆலங்குளம் - சுரண்டை சாலையில் சாலையோர குப்பைகளில் வீசிச் சென்றுள்ளனா். ஆண்டு தோறும் விளைச்சல் அதிகரிக்கும் போதெல்லாம் ஏற்படும் விலை சரிவைத் தடுக்க அரசு ஆலங்குளத்தில் ஜாம் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT