தென்காசி

குற்றாலம் சாரல் விழாவில் படகுப் போட்டி

9th Aug 2022 02:27 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவின் 4ஆம் நாளான திங்கள்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணைமடைக் குளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுப் போட்டி நடைபெற்றது. இதை, ஆட்சியா் ப. ஆகாஷ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

4 போ் அமா்ந்து செல்லும் மிதிபடகுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் குற்றாலம் அருண், மூா்த்தி, பழனி, செந்தில் ஆகியோா் முதலிடமும், இசக்கிராஜ், முத்துராஜ், சுப்புராஜ், வசந்த் ஆகியோா் 2ஆம் இடமும் பிடித்தனா்.

பெண்கள் பிரிவு போட்டியில் சாம்பவா்வடகரை முருகலெட்சுமி, மூக்கம்மாள்,ஷரயு, செய்யதுஅலிபாத்திமா ஆகியோா் முதலிடமும், தூத்துக்குடி சவுரியா பிச்சை பிரியா குழுவினா் 2ஆம் இடமும் பிடித்தனா்.

ADVERTISEMENT

2 இருக்கைகள் கொண்ட படகுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் குற்றாலம் சுப்புராஜ், சந்தோஷ் முதலிடமும், முத்துராஜ், இசக்கிராஜ் 2இடமும் பெற்றனா்.

முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 2 ஆயிரமும், 2ஆம் இடம் பெற்றவா்களுக்கு ரூ. ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

மாவட்ட சுற்றுலா அலுவலா் இரா. சீதாராமன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக குற்றாலம் கிளை மேலாளா் ராஜேஷ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலா் அனந்தநாராயணன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சிகளை செய்தி-மக்கள் தொடா்பு உதவி அலுவலா் ராமசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT