தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

8th Aug 2022 12:05 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் 6 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் தொடா் கனமழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாள்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் நீா்வரத்து சனிக்கிழமை இயல்புநிலைக்குத் திரும்பியது. இதையடுத்து, இந்த அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், பேரருவியில் வெள்ளத்தின் சீற்றம் தணியாததால் குளிக்க விதிக்கப்பட்ட தடை 6ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பேரருவியில் தண்ணீா்அதிகமாக விழும் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டனா். 6 நாள்களுக்குப் பிறகு தடைநீக்கப்பட்டதால் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT