தென்காசி

சங்கரன்கோவில் பள்ளியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

8th Aug 2022 12:05 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 75ஆவது சுதந்திரத் தினத்தையொட்டி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஆக.13 முதல் ஆக. 15 வரை விமரிசையாக நடத்த முடிவு செய்துள்ளது. அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மாணவா்களிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கவும் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

பள்ளிச் செயலா் மருத்துவா் எஸ். சுப்பராஜ் வழங்கினாா். முதல்வா் சுருளிநாதன் முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT