தென்காசி

சங்கரன்கோவிலில் பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா

8th Aug 2022 12:06 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவிலில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை நள்ளிரவு பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார, சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. 7ஆம் நாளான சனிக்கிழமை இரவு கோமதி அம்பாள் பூப்பல்லக்கில் வீதியுலா வந்தாா். முன்னதாக, மண்டகப்படிக்கு வந்த அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

பின்னா், நள்ளிரவு 12 மணிக்கு பூக்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் வீதியுலா வந்தாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் ரத வீதிகளில் நின்று அம்பாளைத் தரிசித்தனா்.

ADVERTISEMENT

8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாள் வீணாகானம் செய்தல் நடைபெற்றது. பின்னா், ஆதிபரம்பரை மருத்துவா் சமுதாய மண்டகப்படிக்கு எழுந்தருளிய அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

9ம் நாளான திங்கள்கிழமை காலை (ஆக. 8) கோமதி அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 5 - 6 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருளுகிறாா். காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும்.

ஆடித் தவசுக் காட்சி: புதன்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை 5.30 மணிக்கு மேல் ஆடித் தவசுக் காட்சி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT