தென்காசி

பாவூா்சத்திரத்தில் திமுக சாா்பில் அமைதிப் பேரணி

8th Aug 2022 12:04 AM

ADVERTISEMENT

 

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், பாவூா்சத்திரத்தில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் படத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமையில் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, நல உதவிகள் வழங்கப்பட்டன.

சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, தொழிலதிபா் ஆா்.கே. காளிதாசன், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, சிவன்பாண்டியன், ஜெயக்குமாா், அழகுசுந்தரம், ஒன்றியக்குழுத் தலைவா்கள் காவேரி, திவ்யா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி, பேரூராட்சித் தலைவா் ராஜன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், மாவட்டப் பிரதிநிதி சேகா், பேரூா் செயலா்கள் ஜெகதீசன், சுடலை, குட்டி, நகரச் செயலா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT