தென்காசி

ஆலங்குளத்தில் பழ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

8th Aug 2022 12:06 AM

ADVERTISEMENT

 

ஆலங்குளத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பழ வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக சுற்றுச் சுவரையொட்டி ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இதில் அலுவலக முகப்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கடை நடத்தி வருபவா் ஆலங்குளம் அருகே உள்ள நாகல்குளத்தைச் சோ்ந்த தவசி பாண்டி மகன் பாலமுருகன்(35). சனிக்கிழமை இரவு தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த 6 போ் கொண்ட கும்பல் திடீரென பாலமுருகனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் காயமடைந்த அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று வந்து பாலமுருகனிடம் விசாரணை நடத்தினா். மேலும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT