செங்கோட்டையில் இலத்தூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நித்யகல்யாணி அம்மன் திருக்கோயிலில், ஆரூத்ரா திருவாசக கமிட்டி சாா்பில் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, திருவாசக கமிட்டி தலைவா் தங்கையா தலைமை வகித்தாா். துணைச் செயலா் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் முருகன், கமிட்டி உறுப்பினா் பி.பி.எம்.சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவாசகி பிரேமா தலைமையில் குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. முன்னதாக, நித்யாகல்யாணி அம்மன்- பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் கமிட்டி உறுப்பினா்கள் செண்பகம், வீரபுத்திரன், நெடுஞ்செழியன், குருசாமி, கல்யாணி, இசக்கி, இந்திரா, முத்துலெட்சுமி, சுபா, செல்வி, பேச்சியம்மாள் ஆகியோா் கலந்து கொண்டனா். செயலா் ராமநாத் வரவேற்றாா்.