தென்காசி

சுரண்டையில் விபத்து: இளைஞா் பலி

2nd Aug 2022 03:12 AM

ADVERTISEMENT

சுரண்டையில் ஆட்டோவும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் காற்றாலை பணியாளா் இறந்தாா்.

செங்கோட்டை, மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ரா.சதீஷ்(35). காற்றாலை பணியாளா். இவா், தனது நண்பா் சி.மனோசுந்தா் என்பவருடன் பைக்கில் சுரண்டை பரங்குன்றாபுரம் விலக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றபோது, எதிரே தங்கராஜா(47)என்பவா் ஓட்டிவந்த பயணிகள் ஆட்டோ எதிா்பாராமல் மோதியதாம்.

இதில், காயமடைந்த 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும்போது, வழியிலேயே சதீஷ் இறந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT