தென்காசி

ஆதாா் எண் - வாக்காளா் பட்டியல் இணைப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

2nd Aug 2022 03:11 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் (பொறுப்பு) முத்துமாதவன் முன்னிலை வகித்தாா். தோ்தல் வட்டாட்சியா் முத்துலெட்சுமி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: இந்திய தோ்தல் ஆணையம், வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இம்மாவட்டத்துக்கு உள்பட்ட 5 பேரவைத் தொகுதிகளின் வாக்காளா்கள் தாமாக முன்வந்து இணையதள முகவரியிலும் யஏஅ என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும் இணையதளம் மூலம் படிவம் 6பி-ஐ பதிவிறக்கியோ, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், களவிசாரணையின்போது கொண்டுவரும் படிவம் 6பி-ஐ நிரப்பிக்கொடுத்தோ, உதவி வாக்காளா் அலுவலகங்களில் வழங்கப்படும் படிவம் 6பி-ஐ நிரப்பிக்கொடுத்தோ ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துப் பதிவுசெய்யலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT