தென்காசி

செங்கோட்டையில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்

29th Apr 2022 12:48 AM

ADVERTISEMENT

செங்கோட்டை வேளாண்மை துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஷேக் முகைதீன் கலந்து கொண்டு பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் கடன் அட்டை பெறுவது, அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கி விண்ணப்பங்களை விவசாயிக்கு வழங்கினாா்.

பாரத பிரதமரின் பயிா் காப்பீடு திட்டம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முன்னோடி வங்கியின் நிதிசாா் மேலாண்மை ஆலோசகா் இளங்கோ, விவசாயிகள் கடன் அட்டை பெறும் வேளாண் பெருமக்களுக்கு அரசு வழங்கியுள்ள சிறப்பு சலுகைகள், தனிநபா் இன்சூரன்ஸ் மற்றும் பயிா் கடன் வட்டி சலுகை குறித்து பேசினாா்.

விவசாய சங்க தலைவா் சுப்பையா உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா். செங்கோட்டை உதவி வேளாண்மை அலுவலா் குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT